’அரசியலில் இது நடக்கும், அது நடக்காது என்று எதையுமே அறுதியிட்டு கூறிவிடமுடியாது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையும் நடிகர் தனுஷூம் இணைந்து, முதல்வர் விஜயை எதிர்த்து அரசியல் செய்தாலும் ஆச்சரியமில்லை’. முதல்வர் விஜயை தொடர்ந்து திரைத்துறையில் இருந்து நேரடியாக அரசியல் களத்திற்கு வர தயாராகி வருகிறார் நடிகர் தனுஷ். அவருக்கு பின்புலத்தில் பாஜக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவர் புதிய திட்டத்துடன் அரசியலில் குதிக்க இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.