உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 15 சதவீதம் வரை போட்டியிட இடங்கள் வழங்க தவெக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் தவெக-விற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது. காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்: இவர்களில் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தவிர மற்ற கட்சியினர் தவெக கூட்டணியில் உள்ளனர். மாநில அரசாக தவெக ஆட்சியில் இருந்தாலும் உள்ளாட்சி அதிகாரங்கள் பெரும்பாலும் திமுக, அதிமுக கைவசமே உள்ளது.