சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு திமுக-விற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? என்று தவெக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மீதான சட்டம் ஒழுங்கு மீது திமுக தொடர்ந்து விமர்சனம் முன்வைத்து வருகிறது. குறிப்பாக, செஞ்சியில் மாயமான சிறுமி இதுவரை கண்டுபிடிக்கப்படாத சம்பவம் மொத்த தமிழ்நாட்டிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆளுங்கட்சியான தவெக-வை தொடர்ந்து திமுக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக - திமுக ஆட்சியில் குழந்தைகள் மாயமான விவகாரம் குறித்து தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளதாவது, 10 ஆண்டுகளில் மாயமான குழந்தைகள்: 2016 முதல் 2025 வரை காணாமல் போன குழந்தைகளின் விவரங்களைப் பாருங்கள்!