E100 Ethanol Vehicle: பெட்ரோல் பயன்பாடு இன்றி 100 சதவிகிதம் எத்தனாலை மட்டுமே பயன்படுத்தி ஓடக்கூடிய வாகனங்களுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. E100 Ethanol Vehicle: E100 எத்தனால் பயன்பாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே, 100 சதவிகிதம் எத்தனாலை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. E100 அதாவது கிட்டத்தட்ட 100 சதவிகித எத்தனால் கலவையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஃப்ளெக்ஸ்-ஃப்யூல் வாகனங்களை அனுமதிக்கும் வகையில், மத்திய மோட்டார் வாகன விதிகளில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திருத்தங்களை அறிவித்துள்ளது.