Defender 110 Price: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிஃபெண்டர் 110 கார் மாடலின் விலை, ஒரே அடியாக 34 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக டிஃபெண்டர் உள்ளது. ஆனாலும், முற்றிலுமாக கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக இந்த கார் கொண்டுவரப்படுவதால் அதன் விலை, வெளிநாட்டு சந்தைகளை காட்டிலும் இங்கு மிகவும் அதிகமாக உள்ளது. இதுவே விற்பனையை பாதிக்கும் முக்கிய காரணமாகவும் இருந்து வருகிறது.