சேலத்தை உலுக்கிய பிரபல ரவுடி கொலை சம்பவத்தில் 7 பேர் சரண் அடைந்தனர். சேலத்தில் பிரபல ரவுடி ஜங்ஷன் டேவிட் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் சரணடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஜங்ஷன் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிர் அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜங்ஷன் டேவிட் என்கிற உதயகுமார்(41). இவர் மீது கொலை, நில மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் நில மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ஜங்ஷன் டேவிட் கடந்த 18 நாட்களுக்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நிபந்தனை நிபந்தனை ஜாமின் பெற்றுள்ளார்.