67 ஆண்டுகளாக அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகள், பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியும் அசராத கியூபா. கியூபாவை கைப்பற்ற படைகளை அனுப்பப்போவதாக அமெரிக்க அதிபர் பேசிய விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப்,மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற்ம் முடிவுக்கு வந்தவுடன் அமெரிக்காவுக்கு அருகாமையில் உள்ள கியூபாவிற்கு போர்கப்பல்களை அனுப்ப உள்ளதாக பகிரங்கமாக அறிவித்து புதுப்பதற்றத்தை ஏற்படுத்தினார். கியூபா மீது அமெரிக்காவின் பார்வை திரும்ப காரணமென்ன? உலகிற்கே நாட்டாமை போல் திகழும் அமெரிக்காவிற்கு அதனருகாமையில் இருந்தும் அடிபணிய மறுத்த நாடுதான் இந்த கியூபா.