சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் விரைவாக நிரம்பி வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் அணை திறக்கப்பட உள்ளது. இராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் மழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலையில் இருந்து சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னையில் உள்ள ஏரிகள் பெரும்பாலும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதேபோல், சென்னைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியும் நிரம்பி வருகிறது.