லஞ்சம் பெற்றதாக புகாரில் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஸ்க்கு மருத்துவப் பரிசோதனை முடிந்தது. இதன்பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். “திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டது யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” என்று லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். அன்பில் மகேஸ்க்கு மருத்துவப்பரிசோதனை தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சென்னை ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.