மதுரை: மதுரை மேலூர் அருகே வெளியே விளையாடப் போன 7 வயது சிறுவனின் உடல் பாழடைந்த வீட்டுக்குள் இருந்து நேற்று மீட்கப்பட்டது. அச்சிறுவன் கொலை செய்யப்பட்ட. அச்சிறுவன் கொலை செய்யப்பட்டானா என்ற கோணத்தில் போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.மதுரை மேலூர் அருகே தணியாமங்கலத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 7 வயதில் முத்துவேலன் என்ற மகன் இருந்தார். 3-ம் வகுப்பு படித்து வந்தார்.விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை முத்துவேலன் மற்றும் சிறுவர்கள் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.