11KV உயரழுத்த மின்கம்பியின் மீது தொடர்ச்சியாக எச்சில் பட்டநிலையில் அதன் வழியாக மின்சாரம் முதியவர் பலி. மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோடாவை சேர்ந்த பிரபுலால் குப்தா எனும் 65 வயது முதியவர் காயத்ரி நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். குட்கா பயன்படுத்தும் பழக்கம் கொண்ட பிரபுலால் குப்தா, மதிய வேளையில் மூன்றாவது மாடியின் பால்கனியில் இருந்து குட்காவை மென்று துப்பியுள்ளார். பிரபுலால் குப்தா துப்பிய எச்சிலானது பால்கனியை ஒட்டிச்சென்ற 11KV உயரழுத்த மின்கம்பியின் மீது தொடர்ச்சியாக பட்டநிலையில் அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.