மர்ம நபர்கள் தாக்கியபோது வீரபத்திரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அவரது மனைவியும் படுகாயமடைந்தார். திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே திமுக பிரமுகர் ‘பாத்ரூம்’ முருகன் கொலை வழக்கில் முக்கிய நபராக குற்றம்சாட்டப்பட்டிருந்த வீரபத்திரன், இன்று பட்டப்பகலில் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும், திமுக பிரமுகருமான ‘பாத்ரூம்’ முருகன், கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் காரில் கடத்தப்பட்டு, ஓடும் காரிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் கணக்கு வழக்கு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.