வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் அதிகாலையில் புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அர்னாப் எனப்பெயரிடப்பட்டுள்ள இப்புயல் வருகிற 28-ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் - பாபட்லா இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகைக்கு ஆரஞ்சு அலர்ட் புயல் உருவாகியதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.