ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக திமுக செய்தி தொடர்பு துணை தலைவர் பி.டி.அரசகுமார் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவரை கடந்த ஜூன் மாதம் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். பி.டி.அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அன்பில் மகேஸ் தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடத்தப்பட்டது.