தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் திமுகவை சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நடவடிக்கைக்கு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.