ஹோண்டா நிறுவனத்தின் ஆஃப் ரோட் பைக்கான Honda XR300L விலை, சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம். ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஹோண்டா நிறுவனம் நல்ல மைலேஜ் அளிக்கும் இரு சக்கர வாகனங்கள் முதல் ஆடம்பரமான இரு சக்கர வாகனங்கள் வரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஆஃப் ரோட் Bike: இந்த நிலையில், இந்தியாவில் ஆஃப் ரோட் வாகனங்களிலும் ஹோண்டா கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது. ஏனென்றால், சமீபகாலமாக இந்தியாவில் ஆஃப்ரோட் வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.