ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா புதிய வரலாறு படைத்துள்ளார். மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணி தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறது. இந்திய அணியின் தற்போதைய தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டர் வீராங்கனையாக திகழ்பவர் தீப்தி சர்மா. தீப்தி ஷர்மா புதிய வரலாறு: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று வதோராவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக ப்ரதிகா ராவல் 61 ரன்களும், முன்னாள் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 126 ரன்களும் விளாசினர். இவர்களுடன் தீப்தி ஷர்மா ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் எடுத்தார்.