சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் ரூபாய் 700 கோடி வசூலைக் குவித்து அசத்தியுள்ளது. இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த 15ம் தேதி வெளியாகிய திரைப்படம் ஜெயிலர் 2. முதல் பாகத்தின் வெற்றியால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 700 கோடி வசூல்: பெரும்பான்மையான ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், படத்திற்கு முதல் நாள் முழுவதுமே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது.