School Leave: தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை தீவிர புயலாக வலுப்பெற்று பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.