நீலகிரியில் நேற்று ஒரு நாளில் மட்டும் 62 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகிய அர்னாப் புயல் காரணமாக இந்த மழைப்பொழிவு இருந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் இந்த மழைப்பொழிவால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 62 இடங்களில் மண் சரிவு: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.