புதிய விதிகளின்படி, நீங்கள் எந்த கருவியில் அல்லது சாதனத்தில் வாட்ஸ் அப் , டெலிகிராம் செயலிகளை பயன்படுத்துகிறீர்களோ அந்த சாதனத்தில் அந்த சிம் கார்டு இருக்க வேண்டும். இந்தியாவில் சைபர் குற்றங்கள், ஆன்லைன் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இதற்கு பெரும்பாலும் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மோசடிகளை தடுப்பதற்காக மத்திய தொலைத்தொடர்பு துறை கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளது. இதன்படி வாட்ஸ் அப் , டெலிகிராம் பயன்பாட்டுக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த சிம் பைண்டிங் (SIM-Binding) விதிகள் கட்டாயமாகின்றன.