திமுக-வை மீட்பதற்கான களப்பணியில் உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினிடம் வேதனையைத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மொத்த அரசியல் களத்தையே மாற்றியுள்ளது. திமுக-தான் தங்கள் அரசியல் எதிரி என்று மீண்டும் மீண்டும் கூறி வந்த தவெக அவர்களை வீழ்த்தி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. ஆனால், தவெக-வை ஒருபொருட்டாகவே கருதாத திமுக ஆட்சியை இழந்தது. உதயநிதியிடம் பொறுப்பை ஒப்படைத்த மு.க.ஸ்டாலின்: தோல்விக்கான காரணம் என்ன? என்று கட்சியை மறுசீரமைப்பு செய்து திமுக-வை மீண்டும் பலம்பெறச் செய்ய வைக்க மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்தார்.