வேலூரில் வசித்து வந்த முன்னாள் ராணுவ அதிகாரி பெண் ஒருவருக்கு கடந்த ஒரு வருடமாக ராணுவ ரகசியங்களை பகிர்ந்து வந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான படைகளில் பணியாற்றும் வீரர்கள் ஒருபோதும் நாட்டின் ரகசியங்களை குடும்ப உறுப்பினர்கள் உள்பட பொதுமக்கள் யாரிடமும் பகிரக்கூடாது என்பது அவர்கள் பாதுகாப்பு படையில் இணையும்போதே எடுக்கும் உறுதிமொழியாகும். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உண்டு. பெண்ணிடம் மயங்கிய முன்னாள் ராணுவ அதிகாரி: தற்போது அந்த குற்றத்திற்காக வேலூரைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 52 வயதான இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.