மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காத மாவட்ட நிர்வாகத்தின் மீது பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை:வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இரவு முதல் விடாமல் கொட்டி தீர்த்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு இயக்கம் முடங்கியுள்ளது.