விழுப்புரம்: செஞ்சி அருகே 15 நாட்களாகியும் கிடைக்காத 7 வயது சிறுமி! மயக்க ஸ்பிரே தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி தீவிர விசாரணை! விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி 15 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் சிறுமி குறித்த உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், சிறுமியை மயக்க மருந்து தெளித்து கடத்திச் சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.