ராஜஸ்தானில் ஒரு யூனிட் ரூ.46 மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதற்கு மத்திய அரசின் திட்டமிடல் தோல்வி என அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு. ராஜஸ்தான் மாநிலம் ஒரு யூனிட் மின்சாரத்தை 46 ரூபாய்க்கு வாங்கியது மத்திய மின்சார அமைச்சகத்தின் தவறுதான் என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கூறியுள்ளார். ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46 ராஜஸ்தான் மாநிலம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.46-க்கு கொள்முதல் செய்துள்ளது. இதுவே நாட்டின் மிக உயர்ந்த கொள்முதல் ஆகும். அம்மாநிலம் 330 மெகாவாட் திறன் கொண்ட தோல்பூர் எரிவாயு மின்நிலையத்தில் இருந்து நாட்டின் மிக அதிக விலை கொண்ட மின்சாரத்தைப் பெற்று வருகிறது.