பிரபுதேவா - சிம்ரன் இருவரும் 27 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கமல் ஸ்ரீதேவி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பிரபுதேவா. நடன ஜாம்பவானாக மட்டுமின்றி நடிப்பிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் பிரபுதேவா. இவர் கதாநாயகனாக நடித்த பல திரைப்படங்கள் தமிழில் சக்கைப் போடு போட்டுள்ளது. கமல் ஸ்ரீதேவி: நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பன்முகத் திறன் கொண்ட பிரபுதேவா தற்போது பெரியளவில் படங்களில் கதாநாயகனாக நடிப்பதில்லை. 1990 முதல் 2010ம் ஆண்டு வரை நடிப்பிலும் பரபரப்பாக இருந்தவர் பின்னர் இயக்கம், நடனத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்தினார்.