தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 35 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தொடர்ந்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 1 மணி நேரம்: மாநிலத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து மழை வாட்டி வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.