Nanjil Sampath: தவெகவில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகிவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் சமூக வலைத்தளங்களில் அவரே விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் அரசியலில் பிரபலமான பேச்சாளர்களில் ஒருவராக அறியப்படுவர் நாஞ்சில் சம்பத். இவர் தனது மேடை பேச்சுகளால் அனைவரின் கவனத்தை ஈரத்தவர். முதலில் மதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர் பின்னர் அதிமுகவில் இணைந்தார். அதன்பிறகு திமுகவில் செயல்பட்டு வந்த நாஞ்சில் சம்பத் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியதை அடுத்து அக்கட்சியில் இணைந்தார். தவெகவில் நாஞ்சில் சம்பத் பின்னர் தவெகவில் பரப்புரைச் செயலாளராக செயல்பட்டு வந்தார்.