மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் வகையிலான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி மனோஜ் ஜராங்கே என்பவர் நீண்டகாலமாக போராடி வருகிறார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது மனோஜ் ஜராங்கேவை சரிகட்டும் நோக்கில் பாஜகவிடம் இருந்து 500 கோடி ரூபாய் ஏக்நாத் ஷிண்டே மூலமாக அவருக்கு வழங்கப்பட்டதாக ஆடியோ ஒன்று வெளியானது. மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா இந்த ஆடியோ ஆளும் தரப்பினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதோடு ஆடியோ வெளியான விவகாரத்தில் சதி உள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.