பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமு என்ற தாமோதரன். 1954ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி பிறந்தார். ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில் நுட்பத்தில் கல்வி பயின்றவர். சமையல் கலைஞராக மட்டுமின்றி கல்வியாளராகவும் நூல் ஆசிரியராகவும் தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 2004-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பெற்ற முதல் இந்தியச் சமையல்காரர் என்ற பெருமையையும் பெற்றார்.