திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு பள்ளிகளை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் செயல்படும் தனியார் பள்ளி மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் (Special Classes) நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. விதிகளை மீறி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்துவதாகப் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.