Teachers: சிறப்பு ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், அனைத்து வகை பள்ளிகளிலும் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு டெட் தேர்வு இந்த தேர்வு கடந்த ஜூலை 4, 5-ம் தேதிகளில் தாள்-1, தாள்-2 தேர்வு நடத்தப்பட்டது.