பனீர், வெண்ணெய் போன்ற 100 பொருள்கள் உற்பத்தி நிறுத்தம்: புத்துயிரூட்ட வேண்டிய ஆவினை புதைகுழியில் தள்ளக் கூடாது - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை. சென்னை: பனீர், வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பால் பொருள்களின் உற்பத்தியை ஆவின் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாகவும், ஆவின் நிறுவனத்தை மீட்டெடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருந்த வெண்ணெய், பனீர், பால் பவுடர் உள்ளிட்ட 100&க்கும் மேற்பட்ட பால் பொருள்களின் உற்பத்தியை ஆவின் நிறுவனம் நிறுத்தி விட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.